தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்குண்டு குழந்தை பலி

தனது தந்தை செலுத்திய ஆட்டோவில் சிக்குண்ட ஒன்றரை வயது நிரம்பிய ஆண்குழந்தையொன்று பலியான சம்பவம் பிபிலைப் பகுதியில் நேற்று  இடம்பெற்றுள்ளது.

பிபிலைப் பகுதியின் நன்னபுராவ என்ற இடத்தைச் சேர்ந்த டி.எம். சேனுல சேகான் என்ற ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

தகப்பன் செலுத்திய ஆட்டோ சில்லில் குழந்தை சிக்குண்டதையடுத்து, உடனடியாக அக்குழந்தை பிபிலை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே, இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட மெதகமை பொலிஸார், ஆட்டோ சாரதியான குழந்தையின் தந்தையை கைது செய்துள்ளனர்.

பதுளை தினகரன் விசேட நிருபர்

 

Fri, 04/23/2021 - 13:32


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை