இராணுவத் தளங்களை மேம்படுத்துகிறது அவுஸ்திரேலியா

அவுஸ்திரேலியா, வடக்கில் இருக்கும் 4 இராணுவத் தளங்களை விரிவுபடுத்த 580 மில்லியன் டொலர் செலவிடவுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து போர் உத்திகளை விரிவுபடுத்தத் திட்டமிடுவதாகவும் அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்தார். அமெரிக்காவுடனும், இந்தோ–பசிபிக் வட்டாரப் பக்கத்து நாடுகளுடனும் அவுஸ்திரேலியா இணைந்து செயல்படுகிறது. நாட்டின் நலன்களைப் பாதுகாக்கத் தற்காப்புப் படைக்குத் தொடர்ந்து முதலீடு செய்யப்படும் என்றும் மொரிசன் குறிப்பிட்டார். அமைதி, நிலைத்தன்மை, இந்தோ–பசிபிக் வட்டாரத்தின் சுதந்திரம் போன்றவற்றை நிலைநாட்டும் நோக்கில் அவுஸ்திரேலியா உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ மேம்பாடுகள் இவ்வாண்டு ஆரம்பித்து 2026ஆம் ஆண்டிற்குள் முடிவுபெறும்.

Thu, 04/29/2021 - 09:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை