‘சாத்தான் பாதணி’ விற்பனை நிறுத்தம்

நைக்கி நிறுவனம், "சாத்தான் காலணிகளை" உருவாக்கிய நியூயோர்க்கைச் சேர்ந்த காலணி நிறுவனம் ஒன்றின் மீது வழக்குத் தொடுத்ததை அடுத்து அந்தக் காலணிகளின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

MSCHF என்ற நிறுவனம் வடிவமைத்த அந்தக் காலணிகளில், நைக்கி நிறுவனத்தின் வணிக முத்திரை இடம்பெற்றுள்ளது. மேலும், அவை நைக்கி நிறுவனத்தின் எயார் மெக்ஸ் 97 காலணிகள் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதனால், அவை நைக்கி நிறுவனத்தின் வணிக உரிமையை மீறுவதாக நீதிபதி கூறினார். அந்தச் சாத்தான் காலணிகள் பிரபல பாடகர் லில் நாஸ் எக்ஸை விளம்பரப்படுத்தி வடிவமைக்கப்பட்டவை.

மொத்தமாக, வெறும் 666 ஜோடிக் காலணிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. அந்த 665 ஜோடிக் காலணிகளும் ஏற்கனவே விற்பனையாகிவிட்டன. அவற்றில், ஒரு துளி மனித இரத்தமும் உள்ளது. அவற்றின் விலையோ 1,018 டொலராகும்.

கருத்துச் சுதந்திரத்தில் வலுவான நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், வழக்கிற்கு விரைவாகத் தீர்வு காண விரும்புவதாகவும் MSCHF நிறுவனம் தெரிவித்தது.

தனது காலணிகள், தனித்துவமான கலைப் படைப்புகள் என அந்த நிறுவனம் கூறிவருகிறது.

Sat, 04/03/2021 - 15:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை