அனைத்து அரச தனியார் விழாக்களையும் இடைநிறுத்த உத்தரவு

அனைத்து அரச தனியார் விழாக்களையும் இடைநிறுத்த உத்தரவு-All State & Private Functions Scheduled for Next Two Weeks Cancelled

- அரசாங்கம் அதிரடித் தீர்மானம்

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட் 19 நோய்த் தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் திட்டமிடப்பட்டிருந்த தனியார் துறையின் அனைத்து விழாக்கள், கூட்டங்கள், நிகழ்வுகளையும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களின் கீழ் இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

Sun, 04/25/2021 - 17:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை