போர்க்கால சூழலில் மக்களது துயரங்களை துடைக்க முன்னின்றவர்; மறைந்த ஆயருக்கு பிரதமர் மஹிந்த இரங்கல்

மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவு குறித்த செய்தி அறிந்து மிகுந்த மன வேதனையடைந்தேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தமது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது;

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 06 ஆம் திகதி மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமிக்கப்பட்டு, 1992 ஒக்டோபரில் திருநிலைப்படுத்தப்பட்டார்.  மனிதாபிமான நடவடிக்கையின்போது நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதே எமது எதிர்பார்ப்பாகவிருந்தது. அந்தவகையில் போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில்துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்கவும், ஏழை மக்களுக்கு உதவவும் அவர் அரும்பாடுபட்டார்.

மடு அன்னை தேவாலயத்தை பாதுகாப்பதற்கான இராயப்பு ஜோசப் ஆண்டகையின் அர்ப்பணிப்பை இத்தருணத்தில் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் இழப்பால் துயருறும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Sat, 04/03/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை