அஸ்ட்ராசெனகா தடுப்பூசி: உலக நாடுகளிடையே கவலை

அஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கும் இரத்தம் உறைந்து போவதற்கும் தொடர்பிருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருப்பதால், உலக நாடுகளிடையே கவலை அதிகரித்துள்ளது.

தற்போது அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடுவதை அதிகமான நாடுகள் நிறுத்தியுள்ளன அல்லது கட்டுப்படுத்தியுள்ளன. அந்தத் தடுப்பூசிகளை வாங்கும் திட்டத்தை ஆபிரிக்க ஒன்றியம் கைவிட்டுள்ளது.

நோர்வேயும் டென்மார்க்கும் தடுப்பூசிக்கான தற்காலிகத் தடையை நீட்டிக்க முடிவெடுத்துள்ளன.

ஆனால், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியைத் தொடர்ந்து பயன்படுத்தவுள்ளன.

என்றாலும், 55 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுள்ளோருக்கு மட்டுமே தடுப்பூசி போடவிருப்பதாக அவை கூறின.

இளம் வயதினருக்கு அந்த ஊசியால் இரத்தம் உறைந்து போகும் அபாயம் அதிகம் என்பதால் அவ்வாறு முடிவெடுத்திருப்பதாக அந்நாடுகள் கூறின.

60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே அஸ்ட்ராசெனகா தடுப்பூசி போடவிருப்பதாக ஸ்பெயின் கூறியுள்ளது. தடுப்பு மருந்து திட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து முன்னிலையில் இருக்கும் பிரிட்டனும் அஸ்ட்ராசெனகா தொடர்பான தனது வழிகாட்டலில் கடந்த புதனன்று மாற்றத்தை கொண்டுவந்தது. அதன்படி 18 மற்றும் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு மாற்று தடுப்பு மருந்தை பயன்படுத்த அது பரிந்துரைத்துள்ளது. சுவீடன் மற்றும் பின்லாந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாத்திரம் அந்த மருந்தை பயன்படுத்த முடிவெடுத்துள்ளது.

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ‘இரத்த உறைவு’ பக்க விளைவு மிக அரிதாக ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ ஒழுங்குமுறை கண்-காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பக்கவிளைவுகளைவிட நன்மைகளே அதிகம் என்று 86 சம்பவங்களை உள்ளடக்கிய ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளதாக ஐரோப்பிய மருத்துவ முகமை கூறியது. ஆய்வில் மொத்தம் 25 மில்லியன் தடுப்பூசிகளுக்கான தரவு-கள் ஆராயப்பட்டுள்ளன.

ஆபத்தான அம்சங்கள் பற்றி அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஆனால் பெரும்பாலான இரத்த உறைவு சம்பவங்களில் அறுபது வயதுக்குக் கீழ் உள்ள பெண்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

Sat, 04/10/2021 - 07:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை