இலங்கை பிக்குமார்களுடன் பாகிஸ்தான் ஜனாதிபதி சந்திப்பு

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, ஜனாதிபதி மாளிகையில் இலங்கை பெளத்த பிக்குகளின் பிரதிநிதிகள் குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு துறைகளில் சிறந்த உறவுகளை பேணி வருவதால் பாகிஸ்தான் இலங்கையுடனான தனது உறவை மிகவும் மதிக்கிறது என்றும் பாகிஸ்தான் இலங்கையை ஒரு சிறந்த பங்காளியாகவும் நண்பராகவும் கருதுவதாகவும் இதன்போது ஜனாதிபதி ஆல்வி தெரிவித்தார்.

தூதுக்குழுவை வரவேற்று உரையாற்றும் போது, பாகிஸ்தான் காந்தாரா பெளத்த பாரம்பரியத்தின் பிறப்பிடமாகவும், புத்தரின் பெருமை வாய்ந்த மிக புனிதமான சில நினைவுச்சின்னங்களை தன்னகத்தே கொண்ட இடமாகவும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

உலகின் வேறு எந்த நாட்டையும் விட மிக அதிகமான பெளத்த நினைவுச்சின்னங்கள் காணப்படுவதால் பாகிஸ்தானில் உள்ள பெளத்த மத இடங்களை பார்வையிட இலங்கை பெளத்த பிக்குகளையும், மக்களையும் ஊக்குவிக்குமாறு அவர் தூதுக்குழுவிடம் வேண்டிக்கொண்டார்.

Fri, 04/23/2021 - 12:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை