கியூபாவில் காஸ்ட்ரோ அற்ற புதிய தலைவர்

ராவுல் காஸ்ட்ரோவுக்கு பதில் கியூபா கம்யுனிஸ்ட் கட்சியின் அடுத்த முதன்மை செயலாளராக மிகுவேல் டயஸ் கனேல் நியமிக்கப்படவுள்ளார்.

மிகுவேல் டயஸ் 2018 ஆம் ஆண்டு காஸ்ட்ரோவுக்கு பதில் கியூப ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட நிலையில், அதிக செல்வாக்கு மிக்க கட்சித் தலைமை பொறுப்புக்கு நியமிக்கப்படவுள்ளார்.

இதன்படி 1959 ஆம் ஆண்டு கியூப புரட்சிக்கு பின்னர் பிடல் அல்லது ராவுல் காஸ்ட்ரோ தவிர வேறு ஒருவர் முதல் முறை கியூபாவின் தலைவராக நியமிக்கப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காஸ்ட்ரோவுக்கு விசுவாசமானவராகவும் அவரின் பொருளாதார வடிவத்தை ஆதரிப்பவராகவும் டயஸ் கனேல் பார்க்கப்படுகிறார்.

தமது தலைமை பொறுப்பை இளம் தலைமுறைக்கு வழங்கும் அறிவிப்பை ராவுல் காஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார். 60 வயதான டயஸ் கனேல், ராவுலை விடவும் 30 ஆண்டுகள் இளையவராவார்.

89 வயதான ராவுல் காலஞ்சென்ற தனது மூத்த சகோதரர் பிடல் காஸ்ட்ரோவிடம் இருந்து பதவியை ஏற்று 2011 தொடக்கம் அந்த பதவியை வகித்து வந்தார்.

Wed, 04/21/2021 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை