பெண் ஆளுமைக்கான விருது

கொவிட்-19 காரணமாக கொழும்பு வடக்கு தொகுதி லுனுபொக்குன வட்டாரம் முடக்கப்பட்ட காலத்தில் அப்பகுதிலுள்ள நடுத்தர, வறிய குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டமை, பெண்களின் சுய தொழில் மேன்பாட்டுக்கு மாநகர சபை வழங்கும் தையல் இயந்திரங்களை  வறுமையிலுள்ளவர்களை இனம் கண்டு வழங்கியமை, வட்டாரத்தில் சகல மக்களுடனும் ஒன்றிணைந்து மாநகர சபை அபிவிருத்திப் பணிகளை திறம்பட மேற்கொண்டு வருகின்றமைக்காகவும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் காயத்திரி விக்கிரமசிங்க பெண் ஆளுமைக்கான விருதை பெற்றுள்ளார். 

காயத்திரி விக்கிரமசிங்கவிற்கு   பிரபல அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் இலங்கை மன்றக் கல்லூரியில் வைத்து விருதை வழங்கி கௌரவித்தார்.

Fri, 04/02/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை