Header Ads

மியன்மாரில் 80க்கும் மேற்பட்ட போராட்டக்காரர் சுட்டுக்கொலை

மியன்மாரின் பாகோ நகரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 80க்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதாக செயற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கொல்லப்பட்டவர்களின் சடலங்களை இராணுவம் எடுத்துச் சென்றதால் உண்மயான உயிரிழப்பு எண்ணிக்கையை சரியாக உறுதி செய்ய முடியாதிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

ஆயுதங்களுடன் இருந்த படையினர் நகரும் அனைத்தையும் சுட்டுத் தள்ளியதாக பார்த்தவர்கள் உள்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இடம்பெற்ற இராணுவ சதிப்புரட்சிக்குப் பின்னரான ஆர்ப்பாட்டங்களில் 600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தனது அதிகாரத்தின் பிடியை தக்கவைத்துக் கொல்ல இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பலப்பிரயோகத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் அண்மைய துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பிரதான நகரான யங்கோனுக்கு அருகில் உள்ள பாகோ நகரில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றபோதும், பல குடியிருப்பாளர்களும் அருகாமை கிராமங்களுக்கு தப்பிவந்த நிலையிலேயே வெளி உலகுக்கு இந்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில் உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை கூறப்படுவதை விடவும் அதிகமாக இருக்கும் என்று அரசியல் கைதிகளுக்கான உதவி அமைப்பு என்ற கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது.

“இது கூட்டுப் படுகொலை போன்றது. அவர்கள் எல்லாவற்றையும் சுட்டுத்தள்ளினார்கள்” என்று ஆர்ப்பாட்ட ஏற்பாட்டுக் குழுவான யே ஹ்டுட் அமைப்பை மேற்கோள்காட்டி ‘மியன்மார் நவ்’ என்ற செய்தி வெளியீடு குறிப்பிட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 1 ஆம் திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம் நாட்டில் ஓர் ஆண்டு அவசர நிலையை பிரகடனம் செய்தது தொடக்கம் அங்கு நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

Mon, 04/12/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.