5000 ரூபா கொடுப்பனவு தொடர்ந்து இடம்பெறும்

இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

புதுவருடத்தையொட்டி சமுர்த்தி உதவி பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவு 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் நேற்றைய தினமும் தொடர்ச்சியாக அந்த நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

மேற்படி வேலைத் திட்டத்தை அரசாங்கம் கடந்த 12ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் நேற்று முன்தினம் புதுவருடத்தை யொட்டி அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.

எவ்வாறெனினும் இதுவரை மேற்படி கொடுப்பனவுகளை வழங்குவதற்காக இனங்காணப்பட்டிருந்த 75 வீதமானவர்களுக்கு அந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கிணங்க இதுவரை தமக்கான கொடுப்பனவை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு நேற்று முதல் மீண்டும் கொடுப்பனவுகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் கருத்து தெரிவித்த சமூர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி;

புத்தாண்டையொட்டி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் மற்றும் சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்ததுடன் அதற்கான நடவடிக்கைகள் கடந்த 12ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து 18 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு மேற்படி 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சகல கிராமசேவகர் மட்டத்தில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறெனினும் நேற்றுமுன்தினம் புத்தாண்டு தினத்தையொட்டி அதற்கான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு,இன்று (நேற்று 15ஆம் திகதி) முதல் மீண்டும் கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டன.

உதவிபெறும் குடும்பங்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மேற்படி கொடுப்பனவு வழங்கப்படும் என்றும் அது தொடர்பில் மக்கள் கலவரப்பட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறாயினும் இக்கொடுப்பனவுகள் வழங்குவதற்கு இனங்காணப்பட்ட 75 வீதமான குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமானவர்களுக்கு அடுத்து வரும் சில தினங்களுக்குள் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

 

Fri, 04/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை