மல்வானை நகரில் திடீர் தீ; 4 கடைகள் எரிந்து நாசம்

மல்வானை நகர மத்தியில் நேற்று(23) பிற்பகல் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் நான்கு கடைகளும் மூன்று வீடுகளும் முற்றாக சேதமடைந்துள்ளன.

தீ விபத்தின்போது கடைகளிலும் வீடுகளிலும் எவரும் இருக்கவில்லை என்பதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இத்தீயில் பியகம பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.எஸ் ஹஸனுடைய(ஸ்ரீலங்கா.மு.கா.)வீடு உட்பட மூன்று வீடுகளும் மூன்று புடைவை கடைகளும் ஒரு ப்லாஸ்டிக் கடையும் முற்றாக எரிந்து சாம்பலானதோடு தீயினால் ஏற்பட்ட சேதம் ஏறக்குறைய இரண்டு கோடி ரூபாய்க்கும் மேல் என கூறப்படுகிறது.

ஆரம்பத்தில் ஒரு வீட்டின் நடுப்பகுதியில் உள்ள அறையொன்றில் தீ ஏற்பட்டு பின்னர் அருகிலுள்ள கடைகளுக்கும் வீடுகளுக்கும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை முதலீட்டு சபையின் பியகம வர்த்தக வலயத்தின் தீயணைப்பு படையினராலும் கம்பஹா மாநகர சபையின் தீயணைப்பு படையினராலும் பியகம பொலிஸாரினதும் பிரதேச மக்களினதும் பாரிய ஒத்துழைப்புடன் தீ மேலும் பரவாமல் அனைக்கப்பட்டது.

பிற்பகல் ஒரு மணியளவில் ஏற்பட்ட இத் தீவிபத்து கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தீ நீடித்தது. தீக்கான காரணம் மின்சார கசிவு என சந்தேகிக்ப்படுகிறது.

மல்வானை விசேட நிருபர்

Sat, 04/24/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை