தேங்காய் எண்ணெய் தேவையில் 30% மாத்திரமே நாட்டில் உற்பத்தி

- உள்நாட்டுத் தேவைக்கு தேங்காய் போதுமானதாக இல்லை

நாட்டில் தேங்காய் எண்ணெய்யின் வருடாந்த தேவையில் 30 வீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டுக்கு 80,000 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் தேவையாக உள்ளது. இதில் 30 சதவீதம் மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுவதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், உள்ளூர் தேங்காய் எண்ணெய் தேவையில் 70 சதவீதம் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்றும் அதிகார சபையின் பணிப்பாளர் பியசேன எதிரிமன்னே சுட்டிக்காட்டினார்.

இதன்படி தேங்காய் பொருட்கள் மற்றும் உள்நாட்டு தேவைகள் தொடர்பான தொழில்களின் தேவையை பூர்த்தி செய்ய நாட்டில் தேங்காய் உற்பத்தி போதுமானதாக இல்லை.

இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக, உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தேங்காயை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Sun, 04/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை