சுற்றுலாப் பயணிகளுக்கு 3 மணி நேரத்தினுள் PCR பரிசோதனை அறிக்கை

- பெற்றுக்கொடுக்க அமைச்சு நடவடிக்கை

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் விரைவாக தமது சுற்றுலாவை ஆரம்பிக்கும் முகமாக மூன்று மணித்தியாலங்களுக்குள் பி.சி.ஆர். பரிசோதனை அறிக்கைகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துளளார்.

மருத்துவ ஆராய்ச்சி சங்கத்துக்கும் அமைச்சர் பிரச்சன்ன ரணதுங்கவுக்கும் இடையில் சுற்றுலாத்துறை அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பி.சி.ஆர் அறிக்கைகளை மிகக் குறுகிய காலத்தில் பெற்று தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடர்வதை உறுதிசெய்யும் நோக்கிலேயே இந்த நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.

பி.சி.ஆர். பரிசோதனைகளுக்காக விமான நிலையத்திற்குள் மணிக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. இது தொடர்பில் சுற்றுலாப் பயணிகளிடமிருந்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. விமான நிலைய ஆய்வகத்தை முறைப்படுத்துவதே புதிய திட்டத்தின் நோக்கம். இதனால் சுற்றுலாப் பயணிகள் தமது பி.சி.ஆர் அறிக்கையை மூன்று மணி நேரத்திற்குள் பெற்று சுற்றுப்பயணத்தைத் தொடங்க முடியும்.

எவ்வாறாயினும், மருத்துவ ஆய்வக சங்கம் முன்வைத்த திட்டங்களை மறுபரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகவும், நாட்டுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்பட ஒத்துழைப்புகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 04/03/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை