சீனாவில் பாலர் பாடசாலையில் கத்திக்குத்து; 2 சிறுவர்கள் பலி

தென் சீனாவில் பாலர் பாடசாலை ஒன்றிற்குள் கத்தியுடன் நுழைந்த ஆடவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் இரு சிறுவர்கள் கொல்லப்பட்டு மேலும் 18 பேர் காயமடைந்துள்ளனர்.

குவாங்சி சுவாங் என்ற சுயாட்சி பெற்ற பிராந்தியத்தின் பெய்லியோ நகரில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருப்பதோடு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்்டு வருவதாக சின்ஹவ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

சீனாவில் பாடசாலைகளில் இவ்வாறான கத்திக்குத்து தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான தாக்குதலில் ஈடுபடுபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக அல்லது அதிகாரிகளை பழிவாங்குபவர்களாக அல்லது அறியப்பட்ட தனிநபர்களாக உள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதனன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை.

இதில் பதினாறு மாணவர்களுடன் இரு ஆசிரியர்களும் காயமடைந்துள்ளனர். மூன்று தொடக்கம் ஆறு வயதான சிறுவர்களே சீனாவில் பாலர் பாடசாலைகளில் சேர்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2019ஆம் ஆண்டு ஹுபெய் மாகாணத்தில் உள்ள சிறுவர் பாடசாலையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒன்பது மாணவர்கள் கொல்லப்பட்டனர்.

Fri, 04/30/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை