ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வாக்குமூலம் பெற CID அழைப்பு

நேரில் சென்று சஜித் உடல் நலம் விசாரிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீர் சுகவீனம் காரணமாக அவர் இவ்வாறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிய முடிகின்றது.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவை நேற்று (23) காலை 10 மணிக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நடத்தப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டியுள்ளதால் திணைக்களத்துக்கு வருமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

சுகவீனம் காரணமாக கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோவை

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சந்தித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோவின் உடல்நலம் தொடர்பில் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் கேட்டறிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவும் உடன் சென்றிருந்தார்.

Sat, 04/24/2021 - 07:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை