நைகர்: பாடசாலை தீயில் சிக்கி 20 சிறுவர்கள் பலி

நைகர் தலைநகர் நியாமியில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயின்போது அதில் சிக்கிக்கொண்ட குறைந்தது 20 சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.

வைக்கோல் குடிசையிலான வகுப்பறையில் கடந்த செவ்வாய்க்கிழமை மதியம் மாணவர்கள் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் வேளை இந்தத் தீ ஏற்பட்டுள்ளது.

தீ வகுப்பறை வாயில் கதவை அடைத்துக் கொண்டதால் பலரும் மதில் சுவரை தாண்டி தப்பித்ததாக ஆசிரியர் சங்க அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

இதில் தப்பிக்க முடியாத மூன்று முதல் ஐந்து வயதான ஆரம்ப வகுப்பு மாணவர்களே அதிகம் பேர் உயிரிழந்துள்ளனர்.

தீ ஏற்பட்டபோது அந்த பாடசாலையில் சுமார் 800 மாணவர்கள் இருந்ததாக ஆசியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

189 நாடுகளுக்கான ஐ.நா வளர்ச்சிக் குறியீட்டிற்கு அமைய நைகர் உலகின் மிக ஏழ்மையான நாடாக உள்ளது.

Fri, 04/16/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை