மேலும் 2 தடவை தேர்தலில் போட்டி: சட்டத்தில் புட்டின் கையெழுத்து

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், மேலும் இரண்டு தவணைக்காலத்துக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வழிவகுக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார். அது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலத்த குறைகூறலுக்கு உள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

69 வயதாகும் புட்டினின் தற்போதைய நான்காவது தவணைக் காலம், 2024ஆம் ஆண்டுடன் முடிவடையவுள்ளது. ஆனால் கடந்த செவ்வாய்க்கிழமை கையெழுத்தான சட்டப்படி, அவர் மீண்டும் இரண்டு தவணைக்கு ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட முடியும்.

அந்தத் தேர்தல்களில் அவர் வெற்றிபெற்றால் 2036ஆம் ஆண்டுவரை அவரே ரஷ்ய ஜனாதிபதியாகப் பொறுப்புவகிப்பார். ஜனாதிபதி பதவியின் தவணைக்காலம், ரஷ்யாவில் ஆறு ஆண்டுகளாகும். ரஷ்ய அரசமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் குறித்துச் கடந்த ஆண்டு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதிய சட்டத் திருத்தம், அந்த வாக்கெடுப்பின் முடிவை அதிகாரபூர்வமாக்கியுள்ளது.

2008இல் புட்டின், அப்போதைய பிரதமர் டிமெட்ரி மெத்வதேவுடன் பதவியைப் பரிமாறிக்கொண்டு ஆட்சியில் நீடித்தார். பின்னர் 2012 இல் அவர் மீண்டும் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்றினார்.

Thu, 04/08/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை