நைகரில் பள்ளிவாசலில் தாக்குதல்; 19 பேர் பலி

மாலி நாட்டு எல்லைக்கு அருகில் இருக்கும் மேற்கு நைகர் கிராமம் ஒன்றில் பள்ளிவாசலில் தொழுதுகொண்டிருந்தவர்கள் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாட்டின் பதற்றம் கொண்ட டில்லபரி பிராந்தியத்தில் கெய்கொரூ என்ற கிராமத்தில் கடந்த சனிக்கிழமை மாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

கடந்த ஜனவரி தொடக்கம் இடம்பெற்று வரும் இஸ்லாமியவாத ஆயுததாரிகள் நடத்தும் தாக்குதல்களின் தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆயுதம் ஏந்தி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாக டில்லபரி பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளனர்.

டில்லபரி பிராந்தியம் நைகர், மாலி மற்றும் புர்கினா பாசோ நாட்டு எல்லைகளை ஒன்றிணைக்கின்ற சட்ட ஒழுங்கு அற்ற மூன்று வலயங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது. இந்தப் பகுதி மீது இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழுவுடன் தொடர்புபட்ட அமைப்புகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த ஜனவரி தொடக்கம் தீவிரம் அடைந்திருக்கும் இவ்வாறான தாக்குதல்களில் 300க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

Tue, 04/20/2021 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை