கொவிட்-19 தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்த திட்டம்

சீனா வெவ்வேறு தொழில்நுட்பங்களைக் கொண்டு கொவிட்–19 தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவது குறித்துப் பரிசீலித்து வருகிறது.

அந்நாட்டின் நோய்க் கட்டுப்பாட்டுத், தடுப்பு நிலையம் ஏற்கனவே இருக்கும் தடுப்புமருந்துகளின் செயல்திறனை அதிகரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

செலுத்தப்படும் தடுப்பு மருந்தின் அளவை அதிகரிப்பது,

தடுப்பூசி போடப்படும் இடைவெளியைச் சரிசெய்வது,

இன்னும் அதிக முறை தடுப்பூசி போடுவது போன்ற தெரிவுகளை நிலையம் பரிசீலிக்கிறது.

தற்போதைக்கு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவதைச் சீனா பரிந்துரைக்கவில்லை.

பைசர்–பயோஎன்டெக், மொடர்னா ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள 2 தடுப்பு மருந்துகளின் செயல்திறன் 90 வீதத்திற்கும் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது.

தடுப்பூசிகளைக் கலந்து பயன்படுத்துவதால், நோய்ப்பரவலிலிருந்து இன்னும் அதிகமான பாதுகாப்புக் கிட்டுமா என்பது குறித்து

பிரிட்டன் போன்ற நாடுகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பொது மக்களின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்ட நான்கு உள்நாட்டு தடுப்பு மருந்துகளை சீனா மேம்படுத்தி இருப்பதோடு இந்த ஆண்டு இறுதிக்குள் 3 பில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை தயாரிக்க எதிர்பார்ப்பதாக சீன அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 

Tue, 04/13/2021 - 14:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை