கொவிட்–19: ஓர் ஆண்டுக்குள் புதிய தடுப்பூசி தேவைப்படலாம்

ஓராண்டு அல்லது அதற்கும் குறைவான காலகட்டத்திற்குள் தற்போது பயன்படுத்தப்படும் கொவிட்–19 தடுப்பூசிகள் செயலிழந்து, மாற்றங்கள் செய்யப்பட்ட தடுப்பூசிகள் தேவைப்படலாம் என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் 28 நாடுகளைச் சேர்ந்த தொற்றுநோய் நிபுணர்கள், நச்சுயிரியல் வல்லுநர்கள் என மொத்தம் 77 பேர் கலந்துகொண்டதாக தி கார்டியன் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவர்களில் மூவரில் ஒருவர், 9 மாதங்கள் அல்லது அதற்கும் குறைவான நேரத்திற்குள் புதிய தடுப்பூசிகள் தேவைப்படலாம் என்று கூறினர்.

தினமும், புதிய வகை வைரஸ் தொற்றுக்கள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.

அவை இன்னும் சக்தி வாய்ந்ததாக, அதிகம் பரவக்கூடியதாக இருக்கலாம் என்று யாலே பல்கலையின் தொற்றுநோய்ப் பிரிவின் துணைப் பேராசிரியர் குறிப்பிட்டார்.

உலக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படாவிட்டால், தடுப்பூசிகளைச் செயல் இழக்கச் செய்யக்கூடிய புதிய வகை நோய்த்தொற்று உருவாகலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தடுப்பூசி போடும் பணியில் மும்முரமாக இருந்தாலும், தென்னாபிரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளின் மக்கள்தொகையில் 1 வீதத்தினருக்குக் கூட இன்னும் தடுப்பூசி போடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Thu, 04/01/2021 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை