நைஜீரிய சிறையில் இருந்து 1,800 கைதிகள் தப்பியோட்டம்

நைஜீரிய சிறைச்சாலை ஒன்றில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அந்த சிறைச்சாலையில் இருந்த 1,800க்கும் அதிகமான கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

தென்கிழக்கு நகரான ஒவேரியில் உள்ள இந்த சிறைச்சாலையின் நிர்வாக பிரிவில் குண்டுகளை வெடிக்கச்செய்து சிறைச்சாலை வளாகத்திற்குள் தாக்குதல்தாரிகள் நுழைந்துள்ளனர்.

இதில் தப்பிச்சென்ற ஆறு கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கே திரும்பி இருப்பதோடு 35 கைதிகள் தப்பிச்செல்ல மறுத்துள்ளனர்.

தடை செய்யப்பட்ட பிரிவினைவாதக் குழு ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியதாக பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர். எனினும் அந்தக் குழு இதனை மறுத்துள்ளது.

இதன்போது 1,844 கைதிகள் தப்பிச்சென்றிருப்பதாக நைஜீரிய சீர்திருத்தச் சேவை உறுதி செய்துள்ளது. கடந்த திங்கட்கிழமை காலை பஸ் வண்டிகள் மற்றும் டிரக் வண்டிகளில் ஆயுதங்களுடன் வந்த நபர்கள் ஒவேரி தடுப்புக்காவல் மையத்தை ஆக்கிரமித்தனர் என்று அந்த சேவை குறிப்பிட்டுள்ளது.

இந்த சம்பவம் இடம்பெற்ற இமோ மாநிலத்தில் மத்திய அரசு மற்றும் பழங்குடி இக்போ மக்களுக்கு இடையில் முறுகள் இருந்து வரும் நிலையில் அங்கு பிரிவினைவாத குழுக்கள் தீவிரமான இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Wed, 04/07/2021 - 07:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை