இராகலையில் தீ 16 வீடுகள் சேதம்

ஆறு குடும்பங்கள் பாதிப்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட நெடுங்குடியிருப்பில் நேற்று (26) திங்கட்கிழமை ஏற்பட்ட  தீ விபத்தில் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இத்தோட்டத்தில் 9ஆவது இலக்க நெடுங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அவ்வீடுகளில் குடியிருந்த 6 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இத்தீவிபத்தின் போது மக்கள் ஒண்றிணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். தீவிபத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாதபோதிலும் பெருமளவில் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்றும் மக்கள் தெரிவித்தனர். தமக்கு உடனடியாக எவ்விதமான உதவிகளும் வழங்கப்படவில்லை எனவும் அதிகாரிகளோ அரசியல்வாதிகளோ வந்து பார்க்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

 

Tue, 04/27/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை