Header Ads

அமரர் டி.ஆர் விஜேவர்தனவின் 135ஆவது ஜனனதின நிகழ்வு இன்று

லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் அமரர் டி.ஆர்.விஜேவர்தனவின் 135ஆவது ஜனன தினத்தையொட்டி லேக்ஹவுஸ் நிறுவனத்தில் நேற்று (02) இரவு முழுவதும் பிரித் பாராயணம் நடைபெற்றதுடன் இன்று (03) பிக்குமாருக்கான தானம் வழங்கும் நிகழ்வு நடைபெறும்.

கடந்த பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி டி.ஆர்.விஜேவர்தவின் 135ஆவது ஜனன தினமாகவிருந்த போதிலும் நாட்டில் நிலவும் கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக வழமையாக முன்னெடுக்கப்படும் பிரித் ஓதும் நிகழ்வு பிற்போடப்பட்டதுடன், நேற்று இரவு முதல் பிரித் நிகழ்வு ஆரமாகி இன்றும் தானம் வழங்குதல் நடைபெறுகிறது.

ஆங்கிலேயர்களிடம் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள தேசபற்றாளர்களுடன் இணைந்து சிங்களம், தமிழ், ஆங்கிலப் பத்திரிக்கைகளை ஆரம்பித்து அன்னார் ஆற்றியது உன்னதமான பணியாகும். பத்திரிகைகளின் ஊடாக நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுக்கும் வழிநடத்தல்களில் டி.ஆர்.விஜேவர்தனவின் பங்களிப்பு அளப்பரியதாகும்.

பத்திரிகைகளின் தாய்வீடாகவுள்ள லோக்ஹவுஸ் நிறுவனத்தை 1926ஆம் ஆண்டு ஆரம்பித்து இலங்கையில் பத்திரிக்கைத்துறைக்கு மிகப்பெரிய பங்களிப்பை பெற்றுக்கொடுத்ததுடன், வர்த்தக துறையிலும் பத்திரிக்கைக்கு உத்துயிர் கொடுத்திருந்தார்.

1886ஆம் ஆண்டு பெப்ரவரி 23ஆம் திகதி தொன் பிலிப் விஜேவர்தனவுக்கு மகனாக டி.ஆர்.விஜேவர்தன பிறந்ததுடன், ஹலோனா விஜேவர்தன அவரது தாயாகும். மோதரை சாந்த தோமஸ் கல்லூரியில் ஆரம்ப கல்வியை பெற்றுக்கொண்ட டி.ஆர்.விஜேவர்தன, இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் உயர் சட்டக் கல்வியை பெற்று நாட்டுக்கு வந்தார்.

ஆழமான கலாசார, அரசியல் அறிவையும் தேசப்பற்றையும் கொண்டிருந்த டி.ஆர்.விஜேவர்தன 1950 ஆண்டு ஜுன் மாதம் 13ஆம் திகதி இவ்வுலகைவிட்டு பிறிந்தார்.

கொழும்பு மத்தியில் அவர் உருவாக்கிய லேக்ஹவுஸ் கட்டடம் கலாசாரமாக மிளிர்வதுடன், லேக்ஹவுஸ் நிறுவனப் பத்திரிகைகள் இலங்கை பத்திரிகைத் துறையில் இன்றும் முன்னோடியாக தேசப்பற்றுடன் வெளியாகி வருகின்றன.

Sat, 04/03/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.