எகிப்தில் ரயில் தடம்புரண்டு 11 பேர் பலி: பலரும் காயம்

எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு அருகில் பயணிகள் ரயில் தடம்புரண்டதில், 11 பேர் உயிரிழந்ததோடு குறைந்தது 98 பேர் காயமடைந்தனர்.

கெய்ரோவுக்கு வடக்கே உள்ள பன்ஹா நகரத்தில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட விபத்தில், 4 ரயில் பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு வெளியேறியதாக, அந்நாட்டு ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், ரயில் வண்டிகள் கவிழ்ந்து கிடப்பதையும் பயணிகள் ரயிலைவிட்டு அவசரமாக வெளியேறிச் செல்வதையும் காட்டின.

விபத்து நடந்த இடத்திற்குக் குறைந்தது 60 மருத்துவ அவசர உதவி வாகனங்கள் அனுப்பப்பட்டன.

காயமுற்றவர்கள், அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாக எகிப்தின் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

ரயில் எதனால் தடம் புரண்டது என்பது தெளிவாகத் தெரியவில்லை. விபத்தில் சிக்கிப் பிழைத்தவர்களைத் தேடும் பணிகள் தொடர்கின்றன.

டஹ்டா நகரில் கடந்த மார்ச் மாதம் இரு ரயில்கள் மோதிய விபத்தில் 20 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tue, 04/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை