விவசாயி - மேய்ப்பாளர் மோதலால் சாட்டில் 100க்கு மேற்பட்டோர் பலி

சாட் நாட்டின் தென் கிழக்கில் விவசாயிகள் மற்றும் நாடோடி மேய்ப்பாளர்களுக்கு இடையே அண்மைய நாட்களில் இடம்பெற்று வரும் மோதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக மனிதாபிமான மற்றும் மனித உரிமைக் குழுக்கள் தெரிவித்துள்ளன.

ஆயுதப் பெருக்கம் மற்றும் கால்நடைகள் பயிர் நிலங்களை அழிப்பது போன்ற சம்பவங்கள் காரணமாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் இடம்பெற்று வருகிறது.

தற்போதைய மோதல்களில் 100க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருப்பதாக தொண்டு அமைப்புகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் தேசிய மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

“10க்கும் அதிகமான கிராமங்கள் தீமூட்டப்பட்டிருப்பதோடு 100க்கும் அதிமான மனித உயிர்கள் பறிபோயுள்ளன” என்று அந்த ஆணைக்குழு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மவுரியா பகுதியில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சலாமத் மாகாண தலைநகர் ஆம் டிமானில் உள்ள மருத்துவமனையில் ஏழு உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதோடு 61 பேர் காயமடைந்துள்ளனர்.

Tue, 04/20/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை