ரூ.1000 சம்பளத்துடன் சலுகைகளையும் வழங்குமாறு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொகவந்தலாவ பொகவான தோட்டத்தில் நாட்சம்பளம் ஆயிரத்தை பெற்றுக்கொடுத்த அரசாங்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் உரிமை மற்றும் இதுவரை கிடைத்த சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கோரி நேற்று ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

தோட்டகொழுந்து மடுவத்தின் முன்பாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளம் ஆயிரம் ரூபா என்ற கோரிக்கை

நீண்டகால கனவாக இருந்து வந்த போதிலும் ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க அரசாங்கம்  நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் தொழிலாளர்களின் கொடுப்பனவுகள் ஏனைய சலுகைகைள் தோட்ட நிர்வாகத்தினால் இடை நிறுத்தப்பட்டுள்ளன. அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பொகவந்தலாவ பொருந்தோட்ட பொகவந்தலாவ தோட்ட மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொகவந்தலாவ கம்பனிக்குட்பட்ட  பொகவந்தலாவ குயினா கீழ்பிரிவு , மேல்பிரிவு ஆகிய தோட்ட மக்களினால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆயிரம் ரூபா  நாட் சம்பளம் இந்த மாதத்தில் இருந்து வழங்கப்படும் என்பதை அரசாங்கம் அறிவித்ததை அடுத்து  நாளைமுதல் தோட்டப்பகுதியில் இயங்கி வந்த சிறுவர் நிலையங்களில் பணி புரிந்து வந்த

உத்தியோகத்தர்கள் மற்றும் தோட்ட புறங்களில் பணியாற்றி வந்த சுகதார உதவியாளர்ககளின் எண்ணிக்கை தோட்ட நிர்வாகத்தினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் ஒரு நாள் சம்பளத்திற்காக 15கிலோ கிராம் தேயிலை பச்சை கொழுந்து பறித்து வந்த தோட்ட தொழிலாளர்களை 20கிலோ கிராம்   பறிக்குமாறு நிர்வாகம்  வலியுருத்தி வருகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம்முன்னெடுக்கப்பட்டதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

குறித்த தோட்டப்பகுதியில் பறிக்கப்பட்ட ஒரு கிலோ  பச்சை தேயிலை கொழுந்திற்கு   40ருபாய் அளவில் தொழிலாளர்களுக்கான சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் எம்மால் நாள் ஒன்று 20கிலோ  தேயிலை கொழுந்து பறிக்க முடியாது எனவும் தெரிவித்தனர்.

தொழிலாளர்களுக்கு இதுவரைகாலமும்  கிடைக்கப் பெற்ற அனைத்து உரிமைகள், சலுகைகளை தோட்ட நிர்வாகம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கபட வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சுமார் இரண்டு மணித்தியாலங்கள் இந்த ஆர்பாட்டத்தில் ஈடுட்டனர். 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

 

Fri, 04/09/2021 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை