தோட்ட தொழிலாளருக்கு ஏப்ரல் முதல் 1000 ரூபா

சபையில் அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

அரசாங்கத்துக்கு சொந்தமான தோட்டங்களில் ஏப்ரல் மாதத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கப்படுமென பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் நேற்று (06) காலை 10 மணிக்கு கூடியது. வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

''அரசாங்கத்துக்கு சொந்தமான தோட்டங்களில் ஏப்ரல் மாதத்திலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும். ஆயிரம் ரூபாய் சம்பளத்தை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காத கம்பனிகளை அரசாங்கத்துக்கு சுவிகரிப்பதற்கான எந்தவிதமான யோசனைகளும் இல்லை. அனைத்து பெருந்தோட்ட நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குமென நம்புகிறோம். இதுவொரு பாரிய வெற்றியாகும்.

இரத்தினபுரியில் காணிகளற்ற தோட்டக் குடும்பங்களுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக்கும். இரத்தினபுரி மாவட்டத்தில் தோட்டங்களில் 21 ஆயிரத்து 63 குடும்பங்கள் வசிப்பதாகவும், இவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2 ஆயிரத்து 414 குடும்பங்களுக்கு 177.9 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளது'' என்றும் அவர் கூறினார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 04/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை