பீஜிங்கில் பெரும் மணல் புயல்: அபாய நிலையில் காற்று மாசு

சீனத் தலைநகர் பீஜிங்கில் நேற்றுக் காலை மணல் புயல் வீசியதில் காற்றில் அடர்ந்த துகள்கள் படிந்துள்ளன.

மங்கோலியாவில் இருந்தும் சீனாவின் வடமேற்குப் பகுதிகளிலிருந்தும் அந்தப் புயல் வீசியது. பீஜிங்கைச் சுற்றியுள்ள கான்சு, ஷான்ஸி, ஹெபெய் ஆகிய பகுதிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டன.

சீனாவின் வானிலை ஆய்வுத்துறை நிர்வாகம் நேற்றுக் காலையில் அங்கு மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. பீஜிங்கில் காற்றுத் தூய்மைக்கேடு அதிகபட்ச நிலையான 500ஐ எட்டியது. சில பகுதிகளில் ஒரு கன மீற்றருக்குச் சுமார் 2,000 மைக்ரோகிராம் அளவிலான பீ.எம்10 துகள்கள் இருந்தன.

நுரையீரலுக்குள் நுழையக்கூடிய பீ.எம்2.5 துகள்கள் கன மீற்றருக்கு 300 மைக்ரோ கிராம் அளவில் இருந்தன.

சீனாவின் வடபகுதியில் காடுகள் அழிக்கப்பட்டுள்ளதால், அதன் அருகில் உள்ள கோபி பாலைவனத்திலிருந்து வீசும் புயல் சீனாவிற்குள் மணலைக் கொண்டுவருவது வழக்கம். இது பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நிகழும்.

கடந்த சில வாரங்களாகப் பீஜிங்கிலும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு மோசமான நிலையை அடைந்துள்ளது.

Tue, 03/16/2021 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை