அமெரிக்காவில் புயல் தாக்கி ஐவர் உயிரிழப்பு

கொரோனா பாதிப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த புயலில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

புயலின் எதிரொலியால் அலபாமா நகரில் பயங்கர காற்றும் அதனை தொட ர்ந்து மழையும் பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டதால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. மேலும் இரண்டு புயல்கள் உருவாக வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வானிலை ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

கிழக்கு அலபாமாவில் 2019 இல் தாக்கிய இரண்டு புயல்களில் கட்டிடங்கள் மற்றும் வீதிகளுக்கு கடுமையான சேதம் ஏற்பட்டதோடு 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

Sat, 03/27/2021 - 11:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை