தடுப்பூசி வதந்திகளுக்கு பேஸ்புக் முட்டுக்கட்டை

தடுப்பூசிகளையும் அதன் பாதுகாப்பையும் பற்றி விவாதிக்கும் பதிவுகளுக்கு முத்திரையிட ஆரம்பித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியைப் பற்றிய தவறான தகவல்களை அதன் தளங்களில் பரப்ப பேஸ்புக் அனுமதித்ததாக பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆய்வாளர்கள் போன்றோர் குறைகூறியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து நிறுவனத்தின் முத்திரையிடும் அறிவிப்பு வந்துள்ளது. அமெரிக்காவில் கொவிட்–19 தடுப்பூசிகளை எங்கு பெறுவது என்பது பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குவதாக பேஸ்புக் நிறுவனம் அதன் இணையப் பதிவில் தெரிவித்தது.

அதன் புகைப்படப் பகிர்வுத்தளமான இன்ஸ்டாகிராமில் கொவிட்–19 தகவல் பகுதியைச் சேர்ப்பதாக அது கூறியது. நோய்த்தொற்றுக் காலத்தில் தடுப்பூசிகள் பற்றிய தவறான கருத்துகள் சமூக ஊடகத் தளங்களில் அதிகரித்துள்ளன. அதைச் சமாளிக்க பேஸ்புக், இன்ஸ்டாகிராம் இரண்டும் அண்மையில் அவற்றின் கொள்கைகளைக் கடுமையாக்கின.

அங்கீகாரம் அளிக்கப்படுவதற்கு முன்னர், தடுப்பூசிகள் பாதுகாப்புச் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன என்ற செய்தியுடன் வரும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கு முத்திரையிடப்படுவதாக நிறுவனம் கூறியது.

Tue, 03/16/2021 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை