பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்களாதேஷ் விஜயத்தில்...

பங்களாதேஷ் மக்களின் தியாகங்களின் நினைவாக மரியாதை செலுத்துவதை ஒரு பாக்கியமாக கருதுகிறேன்

பங்களாதேஷ் சுதந்திர போரின்போது உயிரை தியாகம் செய்த பங்களாதேஷ் மக்கள் செய்த தியாகங்களின் நினைவாக மரியாதை செலுத்துவதை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ நேற்று குறிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் (National Martyrs’ Memorial) பிரதமர் நேற்று அஞ்சலி செலுத்தினார்.

பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் பங்களாதேஷ் விஜயத்தின் ஒரு அங்கமாகவே பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது பங்களாதேஷின் இராஜதந்திர அதிகாரிகளும் கலந்து கொண்டதுடன், அதனை தொடர்ந்து பிரதமர் அந்நாட்டு விருந்தினர் புத்தகத்தில் சிறப்பு குறிப்பொன்றை வெளியிட்டார்.

பிரதமர் வெளியிட்ட சிறப்புக் குறிப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அந்தக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பங்களாதேஷின் சுதந்திரத்தை போற்றும் அனைவரதும் எதிர்காலத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து பங்களாதேஷ் மக்கள், சுதந்திரமான, பெருமை வாய்ந்த பங்களாதேஷை உருவாக்கும் பங்கபந்து ஷெயிக் முஜிபுர் ரஹ்மானின் (Bangabandhu Sheikh Mujibur Rahman) கனவிற்கு சிறந்த சாட்சியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவின் விஜயத்தை குறிக்கும் வகையில், பங்களாதேஷ் சுதந்திர போரில் உயிர்நீத்த வீரர்களின் தேசிய தியாகிகள் நினைவிடத்தில் பிரதமரினால் (Brownea coccinea) மரக் கன்று நாட்டப்பட்டது.

Sat, 03/20/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை