தாய்வான்-அமெரிக்கா இடையே கடல் ஒத்துழைப்பு உடன்படிக்கை

தாய்வானும் அமெரிக்காவும் கடல்துறை ஒத்துழைப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ், தாய்வானுடன் செய்துகொள்ளப்பட்ட முதல் உடன்படிக்கை இதுவாகும். கடலோரக் காவல்படைப் பணிக்குழுவை அமைக்க அந்த ஒப்பந்தம் வகைசெய்யும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்துறைக் கொள்கைகளை ஒருங்கிணைக்க அந்தப் பணிக்குழு உதவும்.

தாய்வான் அதன் கடலோரக் காவல்படையை வலுப்படுத்த, புதிய கப்பல்களை வாங்கியுள்ளது. அந்தக் கப்பல்கள், போர்க்காலத்தின்போது போர்க்கப்பல்களாக மாற்றப்படக்கூடும்.

அண்மையில் சீன மீன்பிடி கப்பல்கள் தாய்வானின் கட்டுக்குள் இருக்கும் கடற்பகுதியில் அத்துமீறியுள்ளன. தாய்வானுடன் மட்டுமின்றி, கிழக்குச் சீனக் கடல் பகுதியில் ஜப்பானுடனும் அரசுரிமை மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தென் சீனக் கடற்பகுதியில் பல தென் கிழக்காசிய நாடுகளுடனும் சீனாவுக்கு முரண்பாடு நீடிக்கிறது.

Sat, 03/27/2021 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை