வாக்குறுதிகள் நிறைவேற்றாமையே ஜெனீவா பிரச்சினைக்கு காரணம்

- ஹர்ச டி சில்வா தெரிவிப்பு

சர்வதேசத்துக்கு அளிக்கப்பட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமையாலேயே ஜெனீவா பிரச்சினைக்கு இலங்கை முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

எதிர்க் கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், மேலும் கூறியதாவது,

ஐக்கிய நடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை ஒரு வாக்கெடுப்புக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளது. இதில் இலங்கை தனக்கு சார்பான பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தியானது  நீதி,நேர்மை, ஜனநாயகம் மற்றும் மனித உரிமை சார்ந்து செயற்படும் ஒரு கட்சியாகும். சகல பிரச்சிணைகளையும் சகல இன மக்களையும் இனைத்துக் கொண்டு தீர்வு காண்பதற்கு முயற்சிக்கும் கட்சியாகும். ஜெனீவா விவகாரத்தையும் அவ்வாறே தீர்க்க முடியும்.

இலங்கை முகம் கொடுத்துள்ள பிரச்சினை யுத்த காலப் பிரச்சினையல்ல. கடந்த ஒரு வருட காலப் பகுதியில் இந்த அரசாங்கம் கடைப்பிடித்த ஜனநாயக விரோத செயற்பாடு மற்றும் மனித உரிமைகளுக்கெதிரான தடைகள், சிவில் நிர்வாகம் இராணுவமயமாக்கப்படல் போன்ற காரணங்களை வைத்துத் தோன்றியவையாகும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 03/09/2021 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை