இந்தோனேஷிய ஆலயமொன்றை குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்

இந்தோனேஷிய ஆலயமொன்றை குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்-Indonesia Makassar Church Bombing-14 Injured

- மோட்டார் சைக்கிளில் நுழைய முற்பட்ட குண்டுதாரிகள்

குருத்தோலை ஞாயிறு தினமான இன்று (28) இந்தோனேஷியாவின் மகாசர் நகரில் கத்தோலிக்க தேவாலயமொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்பில் 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தென் சுலவேசி மாகாணத்திலுள்ள மகாசர் எனும் நகரில், தேவாலயத்தில் ஆராதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து குறித்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தோனேஷிய ஆலயத்தை குறிவைத்து தற்கொலை குண்டுத் தாக்குதல்-Indonesia Makassar Church Bombing-14 Injured

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் அந்நாட்டு மத விவகார அமைச்சர் (யாகுத் சொலில் கூமாஸ்) தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்டதாக நம்பப்படும் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தேவாலயத்திற்கு நுழைய முற்பட்டுள்ள நிலையில், தேவாலய உத்தியோகத்தர்கள் அவர்களை தடுத்து நிறுத்தியபோதே இவ்வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தேவாலயத்திற்கு வெளியே குண்டுவெடிப்பில் சேதமடைந்த மோட்டார் சைக்கிள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளின் உடல் பாகங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Sun, 03/28/2021 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை