பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்திமொழியை கற்றுக்கொடுக்க உதவத் தயார்

- இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ்

சப்ரகமுவ மாகாணத்தில் பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்தி மொழியை கற்று கொடுப்பதற்கு சகல வளங்களும் பெற்று கொடுக்கப்படும் என இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ் தெரிவித்தார்.

இலங்கைக்கான புதிய இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ராகேஷ் நடராஜ், சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவை நேற்றுமுன்தினம்(4) சப்ரகமுவ மாகாண சபை கட்டடத்தொகுதியில் வைத்து சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பாடசாலை கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கும் ஹிந்தி மொழியினை கற்று கொடுப்பதற்கும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ,

சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஹிந்தி மொழி கற்று கொடுப்பதற்கான சகல நடவடிக்கைகளும் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கான சகல வளங்களும் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் பெற்று கொடுக்கப்பட்டுள்ளதுடன். தேவையான புத்தகங்களை பெற்று கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

காவத்தை தினகரன் விசேட நிருபர்

Sat, 03/06/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை