பாராளுமன்ற அறிக்கைகளை எம்.பிக்கள் விரும்பும் மொழிகளில் வெளியிட முடிவு

பாராளுமன்ற அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட பெருமளவு செலவு ஏற்படுவதனால் எம்.பி.க்கள் விரும்பும் மொழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவற்றை அச்சிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.  

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை காலை 10மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய நிலையில் விடுத்த சபாநாயகர் அறிவிப்பின்போதே இதனை தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,  

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை மூன்று மொழிகளிலும் அச்சிட்டு வழங்க பெருமளவு செலவு ஏற்படுகின்றது. இதனைக்கட்டுப்படுத்த வேண்டும். எனவே சபை உறுப்பினர்களின் மேசைகளில் அவர்கள் அறிக்கைகளை பெற விரும்பும் மொழி தொடர்பிலான விபரம் கோரும் படிவம் வைக்கப்பட்டுள்ளது. எனவே உறுப்பினர்கள் தாமதிக்காது அறிக்கைகளை எந்த மொழியில் தாம் பெற விரும்புகின்றோம் என்ற விபரத்தை பதிவு செய்து வழங்குமாறு கோருகின்றேன்.  

இதன்மூலம் அறிக்கைகளை தேவையற்று மூன்று மொழிகளிலும் பெருமளவு அச்சிடுவதனை தவிர்த்து செலவுகளைக் குறைக்க முடியும் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 03/26/2021 - 12:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை