மஸ்கெலிய ராணித்தோட்டத்தில் லயன் குடியிருப்பில் திடீர் தீ விபத்து

- 24 குடும்பங்கள் நிர்க்கதி

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  (குயின்ஸ்லேன் ) ராணித்தோட்டத்தில் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20  குடியிருப்புகள் எரிந்து நாசமாகியுள்ளன.

நேற்று 17-.03-.2021பிற்பகல் 2மணியளவிலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ பரவலை  தோட்ட பொதுமக்களும் நிர்வாகமும் இராணுவம் மற்றும் பொலிஸார்  இணைந்து கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் சுமார் மூன்று  மணித்தியாலங்களின் பின்னர்   கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இருந்த போதும் குடியிருப்புகளில் இருந்த அத்தியாவசிய பொருட்கள், ஆடைகள், மற்றும் ஆவணங்கள், என்பன எரிந்து நாசமாகியுள்ளன. தீ விபத்துக்குள்ளான லயன்  தொகுதியில்  24  குடும்பங்களை சேர்ந்த 80பேர் வரை தங்கியிருந்துள்ளனர். இவர்கள் தற்பாேது நிர்கதிக்குள்ளாகியுள்ளதுடன் அவர்களை குயின்ஸ்லேன் தமிழ் வித்தியாலயத்தில்  தற்காலிகமாக தங்க வைக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என  மஸ்கெலிய பொலிஸார்  தெரிவித்தனர். மின்சார கோளாறு காரணமாக தீ பற்றி இருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில்   மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Thu, 03/18/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை