தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் எடுத்துரைப்பு

அமைச்சர் லொகுகே தலைமையில் ஆரம்பம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் பற்றி தெளிவூட்டும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்படவுள்ளது.  நுகர்வோர் சேவை அதிகார சபையும், வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

அமைச்சர் காமினி லொக்குகே மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவின் தலைமையில் இதன் ஆரம்ப நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நேற்று (15) காலை நடைபெற்றது.

வாகன விபத்துக்களில் அதிகமாக பாதிக்கப்படுவோர் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்களே என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.இதனால் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் மற்றும் தலைக்கவசம் அணிதலின் முக்கியத்தும் பற்றி இந்த வேலைத்திட்டத்தின் போது தெளிவுபடுத்தப்படவுள்ளன.

நாட்டில், கடந்த 05 ஆண்டு காலப்பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 5,677 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பலியானதாகவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பான தலைக்கவசம் அணியாமை, அதிகரித்த வேகம், மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியமை என்பனவே இந்த விபத்துக்களுக்கான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மோட்டார் சைக்கிள்களால் ஏற்படும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்காகவே, நாடாளாவிய ரீதியிலான வேலைத்திட்டம் நேற்று காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்டது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 03/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை