இன, மத ரீதியான பெயர்களில் அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட மாட்டாது

- தேர்தல் ஆணைக்குழு தீர்மானம்

மதம் அல்லது இன ரீதியாக அரசியல் கட்சிகளை பதிவு செய்வதில்லையென்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

அதற்கிணங்க அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்படும்போது அதன் உத்தியோகபூர்வ பெயர் எந்தவொரு மதம் அல்லது இனத்தின் பெயரைக் கொண்டிருந்தால் அவ்வாறான கட்சிகளை பதிவு செய்வதில்லை என்ற தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.  

நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டங்களுக்கிணங்க அரசியல் கட்சி ஒன்று தேசிய கட்சி என்ற ரீதியிலேயே பதிவு செய்யப்படும். நேற்று இடம்பெற்றுள்ள மேற்படி ஆணைக்குழுவின் அமர்வில் அந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். அதேவேளை தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயர்கள் அவ்வாறு மத அல்லது இன ரீதியில் அமைந்திருந்தால் அதனை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட கட்சிக்கு அறிவித்து நியாயமான கால அவகாசம் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்  

Thu, 03/25/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை