தனிமையை தேடி சென்றதாக காணாமல் போன சிறுவன் தெரிவிப்பு

மூன்று தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து காணாமற் போய் தேடப்பட்டு வந்த இரத்மலானையைச் சேர்ந்த டெவோன் கெனி என்ற 16 வயது சிறுவன் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வீடு திரும்பியதாக சிறுவனின் தாயார் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி பிற்பகல் அவர் காணாமல் போயிருந்த நிலையில் சிசிடிவி கெமரா காட்சிகளை ஆராய்ந்து அவர் காலி பிரதான வீதியில் மொரட்டுவை நோக்கி சென்றுள்ளமை தெரிய வந்தது. அதனையடுத்து நான்கு பொலிஸ் குழுக்கள் சிறுவனை தேடும் பணிகளில் ஈடுபட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அந்த நிலையில் மேற்படி சிறுவன் வீடு திரும்பியதாக (20) அவர் தெரிவித்தார்.

தம் வீட்டில் இருந்து தனிமையை நாடி வீட்டின் அருகாமையில் உள்ள பகுதியிலேயே தாம் இருந்ததாக அவர் தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார்.

மேற்படி சிறுவன் பம்பலப்பிட்டி புனித பீற்றர்ஸ் கல்லூரியில் பதினோராம் ஆண்டில் கல்வி கற்பவர்.

அவரது தந்தை வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில் சிறுவன் காணாமல் போவதற்கான எந்த காரணமும் கிடையாது என அவரத தாயார் தெரிவித்துள்ளார். கல்கிஸ்ஸ பொலிஸார் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

திடீரென சிறுவன் காணாமற் போனமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 03/22/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை