காவத்தை கல்வியற் கல்லூரி விடுவிப்பு

கொவிட் 19சிகிச்சை நிலையமாக செயற்பட்டு வந்த இரத்தினபுரி - காவத்தை கல்வியற் கல்லூரி கற்றல் செயற்பாடுகளுக்காக விடுவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் தலைவரும் இரத்தினபுரி மாவட்ட செயலாளருமான மாலினி தொகு போதாகம இத் தகவலை உறுதிப்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில்,

இங்கு நீண்ட காலமாக கொவிட் 19 தொற்றாளர்களுக்கு சிகிச்சைகளை வழங்கி வந்த நிலையில் கல்லூரியின் நிர்வாகம் ஆசிரிய மாணவர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென விடுத்த வேண்டுகோளுக்கு ஏற்ப விடுவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி வளாகம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு ஆசிரியர் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பொருத்தமானதாக சுத்தம் செய்து கல்வியமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்றார்.

இரத்தினபுரி சுழற்சி நிருபர்

Mon, 03/29/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை