ஹமாஸ் இலக்குகள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல்

இஸ்ரேலை நோக்கி ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து பதில் நடவடிக்கையாக காசாவில் ஹமாஸ் இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

காசாவின் தெற்கு துறைமுகங்களில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதாக காசாவைச் சேர்ந்த ஒருவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

காசாவில் இருந்து இஸ்ரேலுக்குள் இன்று வீசப்பட்ட ரொக்கெட் குண்டுக்கு பதில் நடவடிக்கையாக ஹமாஸ் ரொக்கெட் உற்பத்தித் தளம் மற்றும் இராணுவத் தளம் ஒன்றின் மீது போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகொப்டர் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

காசா நகரில் தென்மேற்கில் உள்ள தளம் மீது ஐந்து ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான மஆன் தெரிவித்துள்ளது. மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வை இலக்கு வைத்தும் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

காசாவில் இருந்து வீசப்பட்ட ரொக்கெட் குண்டு தெற்கு இஸ்ரேலின் திறந்த வெளிப்பகுதியில் விழுந்ததாக இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Thu, 03/25/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை