அஸ்ட்ரா செனகா: இரத்தக் கட்டு அச்சத்தால் பல நாடுகளில் பயன்பாடு நிறுத்தம்?

அஸ்ட்ராசெனக்கா கொரோனா தப்பு மருந்தால் இரத்தக் கட்டுகள் (blood clot) ஏற்படும் அச்சம் காரணமாக பல நாடுகளும் அந்த தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை இடைநிறுத்தியுள்ளன.

இந்த ஆபத்து தொடர்பில் உறுதியான ஆதாரங்கள் இல்லாத நிலையிலும் அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை பெறுவதை தாய்லாந்து ஒத்திவைத்துள்ளது.

நாட்டின் தடுப்பு மருந்து திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில் நேற்று தாய்லாந்து பிரதமர் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ளவிருந்த நிலையில் அது பின்னர் ரத்துச் செய்யப்பட்டது.

ஏற்கனவே டென்மார்க் மற்றும் நோர்வே உட்பட பல நாடுகள் இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டை இடைநிறுத்தியுள்ளன. இதில் முன்னெச்சரிக்கையாக, இத்தாலியும், ஆஸ்திரியாவும் அந்தத் தடுப்பூசியின் சில தொகுதிகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டன.

பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசியைத் தொடர்ந்து பயன்படுத்தப்போவதாக அறிவித்துள்ளன.

ஐரோப்பாவில் சுமார் 5 மில்லியன் பேர் அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை ஏற்கனவே பெற்றுள்ளனர். இதில் இரத்தக் கட்டுக்கள் ஏற்பட்ட 30 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

எனினும் இந்த தடுப்பு மருந்து தான் இரத்தக் கட்டு ஏற்படுவதற்கு காரணம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று குறிப்பட்ட ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம், 'இந்த மருந்தின் நன்மைகள் தொடர்ந்து அபாயங்களை விடவும் அதிகமாக உள்ளன' என்று தெரிவித்துள்ளது.

மருத்துவ ரீதியான சோதனைகளில் இந்த மருந்தின் பாதுகாப்பு பற்றி தீவிரமாக ஆராயப்பட்டதாக அஸ்ட்ராசெனக்கா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

'அஸ்ட்ராசெனக்காவின் தரம் சிறந்ததாக இருந்தபோதும், சில நாடுகள் அதனை தாமதப்படுத்த கோரியுள்ளன' என்று தாய்லாந்து தடுப்பு மருந்துக் குழுவின் ஆலோசகர் ஒருவரான பியாசகோல் சகொல்சடாயாடோன் ஊடக சந்திப்பு ஒன்றில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

'நாம் அதனை தாமதப்படுத்தியிருக்கிறோம்' என்றும் அவர் கூறினார். எனினும் ஐரோப்பாவில் வழங்கப்பட்ட அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தில் இருந்து இது மாறுபட்டிருப்பதாக தாய்லாந்து பொது சுகாதார அமைச்சு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்த இரத்தக் கட்டுகள் பிரச்சினை ஆசியாவில் பதிவாகவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீனாவின் 200,000 தடுப்பு மருந்துகளுடன் கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி 117,300 அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்துகள் தாய்லாந்தை வந்தடைந்தன.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி தடுப்பு மருந்து போடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது தொடக்கம் தாய்லாந்தில் 30,000க்கும் அதிகாமானவர்களுக்கு அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளது. எனினும் சீனாவின் கொரோனாவெக் தடுப்பு மருந்து தொடர்ந்து வழங்கப்படுவதாக தாய்லாந்து நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. எனினும் அவுஸ்திரேலியா அஸ்ட்ராசெனக்கா தடுப்பு மருந்தை தொடர்ந்து பயன்படுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளது. எனினும் நிலைமையை தீவிரமாக அவதானித்து வருவதாகவும் அது தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா சுமார் 54 மில்லியன் முறை போடத் தேவையான அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசிகளை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அவற்றில் சுமார் 50 மில்லியன் தடுப்பூசிகளை உள்நாட்டிலேயே அவுஸ்திரேலியா உற்பத்தி செய்யவுள்ளது.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு மறுவுறுதிப்படுத்துவது ஐரோப்பிய ஒன்றிய ஒழுங்குமுறை ஆணையத்துக்குப் பெரும் சவாலாய் அமைந்துள்ளது.

அஸ்ட்ராசெனக்கா தடுப்பூசி போட்டால், இரத்தம் உறைந்து போகும் சாத்தியம் அதிகரிக்கலாம் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

Sat, 03/13/2021 - 08:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை