சூறாவளி பெயர்களுக்கு ஓய்வு

டோரியன், லாரா, எட்டா, ஐயோட்டா ஆகிய பெயர்கள் சூட்டப்பட்ட சூறாவளிகள் பெரிய அளவில் மரணங்களையும் பேரழிவையும் ஏற்படுத்தியதால் அந்தப் பெயர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 நாள்கள் இணையம் வழி நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பின் சூறாவளிக் குழுச் சந்திப்பின்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தக் குழுவில் வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரீபியன் ஆகிய பகுதிகள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு வீசிய 30 சூறாவளிகளில், குறைந்தது 400 பேர் உயிரிழந்துள்ளனர். 41 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.

ஆண்டுதோறும் ஜூன் முதல் நவம்பர் வரை நீடிக்கும் அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தின்போது, சூறாவளிகளுக்குப் பெயர் சூட்டப்படுவது வழக்கம்.

எச்சரிக்கை செய்திகளில் அவற்றை அடையாளம் காண எளிதாக இருக்கும் என்பதால், அவை பெயரிடப்படுகின்றன. சூறாவளிகளுக்கு ஆங்கில எழுத்துகளின் வரிசையில், ஆண் பெயர், பெண் பெயர் மாற்றி மாற்றி வைக்கப்படும்.

ஒவ்வொரு 6 ஆண்டுகளுக்கு, அந்தப் பெயர்கள் மீண்டும் பயன்படுத்தப்படும்.

Fri, 03/19/2021 - 15:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை