அஸாத் சாலி சவூதியில் குடியேற வேண்டும்

முஸ்லிம் சட்டத்தை ஒருபோதும் மாற்ற முடியாது என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஸாத் சாலியைக் கைதுசெய்து, விசாரிக்க, குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தாம் அறிவுறுத்தியுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

அஸாத் சாலி தெரிவித்துள்ள கருத்து, மத அடிப்படைவாதத்துடன் தொடர்புடையதாகும். மத அடிப்படைவாதமே இறுதியில் தீவிர வாதத்தை நோக்கிச் செல்லும். ஷரியா சட்டத்திற்கு அமைய செயற்படுவாராயின், அவர் சவுதி அரேபியாவுக்கே செல்ல வேண்டும்.

அவருக்கு இலங்கையில் இருக்க முடியாது. இலங்கையில் இருக்க வேண்டுமாயின், இலங்கையின் சட்டத்திற்கு அமையவே அவர் செயற்பட வேண்டும்.

இஸ்லாமிய சட்டத்தை எவர் மாற்றியமைத்தாலும் தாங்கள் மாற்றப்போவதில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, அஸாத் ஸாலியை கட்டாயமாக கைதுசெய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அடுத்துவரும் சில நாட்களில் அவரை அழைத்து, விசாரணைக்கு உட்படுத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தான் தனிப்பட்ட முறையில் அறிவுறுத்தியதாக சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டத்திற்கு எதிராக அவர் செயற்பட்டிருப்பாராயின், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சரத் வீரசேகர கூறியுள்ளார்.

எவ்வாறிருப்பினும், கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அஸாத் ஸாலி, சில ஊடகங்கள் தாம் கூறிய விடயத்திற்கு மாற்றமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Mon, 03/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை