கிண்ணியாவில் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பாதிப்பு

கொரோனா அச்சம் காரணமாக கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் நேற்று  (29) பாடசாலைக்கு வருகை தந்த  மாணவர்கள் மீண்டும் வீடுகளுக்கு திரும்பி சென்றதை அவதானிக்க முடிந்தது. இதன் காரணமாக நேற்று பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் பாதிக்கப்பட்டன.

பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று இப்பாடசாலையில் மூன்று ஆசிரியர்கள் PCR பரிசோதனையின் மூலம் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

இதனையடுத்தே மாணவிகள் அனைவரும் பாடசாலைக்குள் பிரவேசிக்காது, மீண்டும் வீடுகளுக்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

எனினும்  மாகாண கல்வி திணைக்களத்தால் நடாத்தப்படுகின்ற பரீட்சைக்கு  தரம் 11மாணவிகள் மாத்திரமே பாடசாலைக்குள் பிரவேசித்தனர்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட  தரம் 11இல் கல்வி கற்கின்ற  மாணவி ஒருவர், சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா மத்திய நிருபர்

Tue, 03/30/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை