மியன்மார் இராணுவ தளபதியின் பிள்ளைகள் மீது அமெரிக்கா தடை

மியன்மார் இராணுவத் தளபதி மின் ஆங் லேங்கின் இரு பிள்ளைகளுக்கும், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள 6 நிறுவனங்களுக்கும் எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ளது.

மின்னின் பிள்ளைகளான ஆங் பே சோன், கின் திரி தெட் மொன் ஆகியோர் மீது தடை விதிக்கப்பட்டதாக அமெரிக்க நிதித் துறை அறிக்கை வெளியிட்டது.

ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பலர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் நடவடிக்கை வந்துள்ளது.

மின் ஆட்சிக் கவிழ்ப்பை வழிநடத்தி, மியன்மாரின் ஆளும் நிர்வாக மன்றத் தலைவராகத் தம்மைத்தாமே பணி அமர்த்திக்கொண்டார்.

தற்போது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தொடர்ந்து இன்னும் கூடுதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்டனி பிளிங்கன் எச்சரித்துள்ளார்.

வன்முறையைத் தூண்டிவிட்டு, மக்களின் விருப்பத்தை அடக்குவோருக்கு எதிராகக் கூடுதல் நடவடிக்கை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று அவர் கூறினார்.

Fri, 03/12/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை