சீன தடுப்பூசி; போதிய தகவல் வழங்காமையே அனுமதி கிடைப்பதில் தாமதம்

கொவிட் 19 வைரஸுக்கு எதிராக சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோபாம் தடுப்பூசி தொடர்பில் போதிய தகவல்கள் கிடைக்கவில்லையென்பதால் அனுமதியளிக்கவில்லை என தேசிய ஒளடத ஒதுங்குப்படுத்தல் அதிகாரசபை விளக்கமளித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

சீனாவில் தயாரிக்கப்பட்டுள்ள சினோபாம் தடுப்பூசியை இலங்கையில் அவசரகாலப் பயன்பாட்டுக்கு அங்கீகரிப்பதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள தேசிய ஒளடத ஒதுங்குப்படுத்தல் அதிகாரசபைக்கு இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபள்ளே கடந்த சில தினங்களுக்கு முன்னர் உரிய தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், போதுமான அளவு தரவுகள் இல்லாமையால் தேசிய ஒளடத ஒதுங்குப்படுத்தல் அதிகாரசபை சினோபாம் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இராஜாங்க அமைச்சர்,

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொவிட்19 தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்க தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபைக்கு போதுமான தகவல்கள் கிடைக்கவில்லை. தகவல் கிடைத்தவுடன் ஒப்புதல் அளிப்பது குறித்து பரிசீலிப்படுகிறது. தடுப்பூசிக்கு அனுமதியளிக்க தேவையான தகவல்கள் முழுமையடையவில்லை. முதல் சுற்றில் 6,00,000 இலட்சம் டோஸ் தடுப்பூசிகள் பெறப்படுமென அறிந்திருக்கிறோம். அவை நன்கொடையாகவே கிடைக்கிறது.

என்றாலும் தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை ஒப்புதல் அளித்தால்தான் அந்த நன்கொடையை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளைப் பெறுவதை உறுதிசெய்வது தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் பொறுப்பாகும்.

இதேவேளை, ஒக்ஸ்போர்டு அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியின் அடுத்த தொகுதி ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு கிடைக்கும் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Sat, 03/20/2021 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை