பண்டிகைக்காலத்தில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது கட்டாயம்

- நாட்டை முடக்குவது சாத்தியமில்லை

புத்தாண்டுக் காலப்பகுதியில் சுகாதார வழிகாட்டல்களை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்றினால் நாட்டில் கொவிட்19தொற்று பரவுவதை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.  

“உலகப் பொருளாதாரம் முழுமையாக வீழ்ந்துள்ளது. இலங்கையின் பொருளாதாரமும் வீழ்ச்சிக்கண்டுள்ளது. எம்மை போன்ற நாடுகளில் முழுமையான பயணத் தடைகளை விதிப்பது அல்லது முழு நாட்டையும் முடக்குவதென்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகும்.  

எதிர்காலத்தில் ஏற்படப்போகும் தொற்றுப் பரவல் தொடர்பில் எச்சரிக்கையுடன் பொது மக்கள் பண்டிகைக் காலங்களில் செயற்பட வேண்டும். உரிய சுகாதார வழிகாட்டல்களை கட்டாயம் மக்கள் பின்பற்ற வேண்டும்.  

தற்போது நாடு ஓரளவு வழமைக்குத் திரும்பியுள்ளது.

நாட்டை முடக்குவது அல்லது தனிமைப்படுத்தல் சட்டங்களை அமுல்படுத்துவதால் பாதிப்புகள் ஏற்படும் என்பதால்

பொதுமக்கள் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றுவது கட்டாயமாகும்.  

பண்டிக்கைக்காலங்களில் மக்கள் எதிர்கால எச்சரிக்கைகள் தொடர்பில் அறிந்துகொண்டு செயற்பட்டால் கொவிட்19 தொற்று பரவுவதை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

சுப்பிரமணியம் நிஷாந்தன் 

Thu, 03/18/2021 - 10:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை